கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.

தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் பணிகளுக்கு மவுசு அதிகரித்து வருவதால்,
எந்த பள்ளியிலும் கம்ப்யூட்டர் சார்ந்த குரூப்களை கைவிடக்கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடம் காலியாக உள்ளது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், இப்பணியிடம் நிரப்பப்படவில்லை. கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில், 169 மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வேறு ஆசிரியர்களால் பாடம் நடத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. படித்து பயிற்சி பெறும் சிலரும், அரசு நியமனத்தை எதிர்பாராமல், தனியார் பள்ளிகளுக்கு தாவி விடுகின்றனர். ஆடிட்டிங், கலை, வரலாறு, தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, கம்ப்யூட்டர் பிரிவுக்கு தருவதில்லை' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி