தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மொத்த இடங்களில் 25சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.
இந்நிலையில் இலவச இடங்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து இலவச இட விவரங்களை இணைய தளத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் டttணீ:/tணட்ச்tணூடிஞிண்ஞிடணிணிடூண்.ஞிணிட்/ இணையதளத்தில் இலவச இடங்களின் எண்ணிக்கை மாவட்டம் மற்றும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.இதில் 32 மாவட்டங்களிலுள்ள 3,720 பள்ளிகள் இடம் பெற்றன. சென்னையில் 371 தொடக்கப் பள்ளிகளில் 11,130 இடங்களில் 2,903 இடங்களில் இலவச சேர்க்கை ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை இலவசமாக பெறலாம்.

அதை உரிய ஆவணங்களுடன் நிரப்பிக் கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.'பள்ளிகள் தவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகம்ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்' என மெட்ரிக் இயக்குனரகம்அறிவித்துள்ளது.விண்ணப்பப் பரிசீலனை விண்ணப்பத் தேர்வு குலுக்கல் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதியை மெட்ரிக் இயக்குனரகம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி