செல்ஃபி ஸ்பெஷல் செல்போன்: எளிதாக எடுக்கலாம் செல்ஃபி; சிறப்பு அம்சங்கள்…. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2015

செல்ஃபி ஸ்பெஷல் செல்போன்: எளிதாக எடுக்கலாம் செல்ஃபி; சிறப்பு அம்சங்கள்….

செல்ஃபி எடுப்பதில் நிறைபேருக்கு ஆர்வம் அதிகம். சிரமப்பட்டு செல்போனை வளைத்து நெளித்து செல்ஃபி எடுக்கத் தேவையில்லாமலும், புதிய தொழில்நுட்பத்துடனும், சிறப்பு அம்சத்துடனும், செல்ஃபி செல்போன் வந்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது செல்ஃபி மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் செல்ஃபி எடுக்கப்படுவதாக சர்வேயில் கூறப்படுகிறது. செல்ஃபி எடுக்க இப்போது பலர் ஸ்டிக் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இப்போது புதிதாக ஒரு மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு நவீன தொழில்நுட்பம் என்று கூறலாம். மொபைலுடன் சேர்ந்து ஸ்டிக் மாதிரியான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த வடிவமைப்பி நிலைநிறுத்தி மிக எளிதாக செல்ஃபி எடுக்க முடியும். 10 பேராகவோ அல்லது ஒரு குரூப்பாக சேர்ந்து செல்ஃபி எடுக்கும் போது இது மிக அழகாக வரும். இதனை அறிமுகப்படுத்தியுள்ளது ஏசஸ் நிறுவனம்.
ஏற்கனவே ஏசஸ் நிறுவனம் ஜென்போன் மாடல்களை வெளியிட்டுள்ளனர்.ஜென்போன் செல்பி 2 செல்போனை வெளியிட்டுள்ளனர். இந்த மொபைல் ஆன்ராய்டு 5.0 லாலிபப் தளத்தில் இயங்குகிறது. இந்த மொபைலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் செல்ஃபிக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முன்புற கேமராவில் 13 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது. இந்த மொபைலில் எடுக்கப்படும் செல்பிக்கள் ஆட்டோமேடிக்காக ப்ரைட்னஸ், கலர் கரெக்சன் செய்து சிறப்பாக காட்டும்.
இந்த செல்ஃபி மொபைலின் லென்ஸ் பைவ்பீரிசம்லேப்டீன் என்ற தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக செல்ஃபிக்களை மிக கூடுதலாக அழகான தோற்றத்தில் காட்டும். பின்புறம் கேமராவின் லென்ஸ் 13 மெகா பிக்சல் கொண்டது. டூயல் எல்இடி பிளாஸ் கொண்ட இதன் மூலம் குறைவான வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க முடியும். ஆட்டோ மேட்டிக் போகஸ் உள்ளது. இந்த செல்ஃபி போனில்ஹோம் ஸ்கிரீனில் எஸ் என்று வரைந்தால் உடனே செல்ஃபி மோடுக்கு சென்று விடும். வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு கொண்ட செல்ஃபிக்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபி மொபைலுக்கு உலக அளவில் பெரிய அளவில் வரவேற்புஇருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி