ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, குறைந்த மதிப்பெண் பெறும், 'டல்' மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளான ஏழு, எட்டு, 10 ஆகிய வகுப்புகளில் சேர, மாணவ, மாணவியர் வந்த வண்ணம் உள்ளனர்.
பல பள்ளிகளில்,
இடைப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்காததால், மாணவர்களின் பெற்றோர், கல்வித் துறை அதிகாரிகளின் சிபாரிசுக்காக, கல்வி அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து, அதிகாரிகள் விசாரித்த போது, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், குறைந்த மதிப்பெண் வாங்கும், 'டல்' மாணவர்களை, அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு கட்டாய வெளியேற்றம் செய்வதாக, பெற்றோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.இப்படி வெளியேற்றப்படும் மாணவர்களை, மற்ற தனியார் பள்ளிகளும் சேர்த்துக் கொள்ளாததால், வேறு வழியின்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர வருவதாக தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் மெட்ரிக் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, அதன் அடிப்படையில், பள்ளிக்கான என்.ஓ.சி., எனப்படும் தடையில்லா சான்றை ரத்து செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்பில் சேரும்மாணவர்கள், எந்த தனியார் பள்ளிகளில் இருந்து வருகின்றனர் என்பதை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி