பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2015

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.அவர் கூறியதாவது:
தொடக்கக்கல்வித் துறையில்பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக அறிவியல் பாடம் பயின்றவர்களையே நியமிக்க வேண்டும்.

தகுதி வாய்ந்தவர்கள் இல்லாத நிலையில், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. இவர்களுக்கு தொகுப்பூதிய பணிக்காலம் பணிமுறிவு காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை பணிக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையைஉடனடியாக வெளியிட வேண்டும், என்றார். மாநில பொருளாளர் செல்லையா, துணைப் பொதுச் செயலாளர் முகமது அயூப் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி