மருந்து சீட்டில் புரியாதபடி எழுதினால் நடவடிக்கை: டாக்டர்களுக்கு தமிழ்நாடுமருத்துவ கவுன்சில் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2015

மருந்து சீட்டில் புரியாதபடி எழுதினால் நடவடிக்கை: டாக்டர்களுக்கு தமிழ்நாடுமருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

டாக்டர்கள் மருந்து சீட்டில் புரியாத படி எழுதுவதாக புகார் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்எச்சரித் துள்ளது.டாக்டர்கள் நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துச் சீட்டில் (பிரிஸ்கிரிப்ஷன்) உள்ள கையெ ழுத்து, மருந்துக் கடைக்காரர் களைத் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை
. ஒரு சில டாக்டர் களின் கையெழுத்து மருந்துக்கடைக்காரர்களுக்கும் புரியாமல் நோயாளிகளுக்கு தவறான மருந் துகளை கொடுத்து விடுகின்றனர். இதனால் நோயாளிகள் பாதிக் கப்படும் சூழ்நிலை உள்ளது.இதுபற்றி ஏராளமான புகார்கள் வந்ததால், டாக்டர்கள் மருந்து சீட்டில் பெரிய (கேபிடல்) எழுத்துக் களில் எழுத வேண்டும், மருந்து கம்பெனியின் பெயரை எழுதாமல் மருந்தின் கெமிக்கல் (ஜென்ரிக்) பெயரை எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய திருத்த விதிமுறை களை கொண்டுவர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை டாக்டர்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என் பதை கண்காணிக்கும் பணியில் மருத்துவ கவுன்சில் ஈடுபட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய மருத்துவ கவுன்சில் (தமிழக கிளை) உறுப் பினருமான டாக்டர் கே.செந்தில் ‘திஇந்து’விடம் கூறியதாவது:மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்தையும் மருத்துவ கவுன் சில் பலமுறை டாக்டர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆனால் டாக்டர் கள் கடைப்பிடிப்பதில்லை. டாக்டர் கள் வேண்டும் என்று புரியாதபடி எழுதுவதில்லை. அவர்களுக்கு அப்படியே பழகிவிட்டதால் எழுது கின்றனர். டாக்டர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கிபொறுமையாக எழுத வேண்டும். டாக்டர்கள் புரியாதபடி மருந்துச் சீட்டில் எழுதினால், தமிழ்நாடு மருத்துவ கவுன் சிலில் புகார் தெரிவிக்கலாம். சம் பந்தப்பட்ட டாக்டர் எச்சரிக்கப்படு வார். அதே டாக்டர் மீண்டும் புரி யாதபடி எழுதுவதாக புகார் வந் தார், அவர் மீது தமிழ்நாடு மருத் துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி யாற்றும் அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங் கத்தின் (எஸ்.டி.பி.ஜி.ஏ.) ஆலோ சகரான க.இளஞ்சேரலாதன் கூறியதாவது:

டாக்டர்கள் மருந்து சீட்டில் மருந்து கம்பெனியின் பெய ருக்கு பதிலாக அதன் கெமிக் கல் (ஜென்ரிக்) பெயரை எழுத வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லை. பெரும்பாலான மருந்துக் கடைக்காரர்களுக்கு மருந்து கம்பெனியின் பெயர்தான் தெரியும். அந்த மருந்தின் கெமிக்கல் பெயர் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், நோயாளிகளுக்கு எந்த கம்பெனி யின் மருந்தை கொடுக்கலாம் என்பதை மருந்துக் கடைக் காரர்கள் முடிவு செய்யும் நிலை ஏற்படும். இதன் மூலம் மருந்து கம்பெனிகளுக்கும், மருந்துக் கடைக்காரர்களுக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுதொடர்பாக சென்னை மருந்து மொத்த விற்பனை யாளர்கள் சங்கத்தின் பொரு ளாளர்சி.அண்ணாமலை கூறியதாவது:

டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்து கம்பெனிகளின் பெயர்களை எழுதுவதாகவும், அதன் மூலம் டாக்டர்களுக்கும், மருந்து கம்பெனிகளுக்கும் இடையே மறைமுகமாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் டாக்டர்கள் மருந்து கம்பெனிகளின் பெயர் களை எழுதக்கூடாது. அதன் கெமிக்கல் பெயரை எழுத வேண் டும் என்று மத்திய அரசு தெரி வித்துள்ளது. இப்போது நோயாளிகளுக்கு எந்த கம்பெனி மருந்தை கொடுக்க வேண்டும் என்பதை மருந்துக் கடைக்காரர்கள்தான் முடிவு செய்ய முடியும். இதன் மூலம் மருந்துக் கடைக்காரர்களுக்கும், மருந்து கம்பெனிகளுக்கும் மறை முகமாக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எப்படி இருந்தா லும் டாக்டர்களும், மருந்துக்கடைக்காரர்களும்தான் நோயாளி களுக்கு எந்த கம்பெனியின் மருந்தை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி