''பொதுத் துறை வங்கிகள், விரைவில் மிகப் பெரிய அளவில் கடன்களுக்கானவட்டியை குறைப்பதாக உறுதி அளித்துள்ளன,'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். வங்கிகள் வட்டியை குறைக்கும்போது, வாகனம், வீட்டுக் கடன் போன்ற கடன்களுக்கான, மாதாந்திர தவணைத் தொகையான, இ.எம்.ஐ., சற்று குறையும்.
இது,
வங்கி கடன்தாரர்களுக்கு நிம்மதியை தரும்.டில்லியில், பொதுத் துறை வங்கி தலைவர்களுடன், வங்கிகளின் நிதி ஆதாரம், வராக் கடன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்த, அருண் ஜெட்லி, பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரிசர்வ் வங்கி, 'ரெப்போ ரேட்' எனப்படும், வணிக வங்கி களுக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, இந்த ஆண்டு மூன்று முறை, தலா, 0.25 சதவீதம் குறைத்து, 7.25 சதவீதமாக நிர்ணயித்துஉள்ளது.
அதிக வட்டி:இதையடுத்து, சில வங்கிகளும் அந்த பலனை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாற்றி, கடன் பெற்றவர்களுக்கான வட்டியை குறைத்துள்ளன. ஆனால், சில வங்கிகள் குறைக்கவில்லை.இதுகுறித்து கேட்டபோது,'வங்கியின் நிதியாதார நிலை, டிபாசிட்டிற்கு அதிக வட்டி வழங்குவது போன்றவற்றால் கடனுக்கான வட்டியை குறைக்க முடியவில்லை' என, அவை தெரிவித்துள்ளன. எனினும், அந்த வங்கிகளும், விரைவில் வட்டியை குறைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளன.
பொருளாதார வளர்ச்சி:
தற்போது சாதகமான சூழல் நிலவுகிறது. வங்கித் துறையிலும் வளர்ச்சி தென்படுகிறது.அதனால், பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் வராக் கடன், கடந்த, ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில், 5.64 சதவீதத்தில் இருந்து, 5.20 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும், வராக் கடன் அதிகமாக உள்ள வங்கிகளிடம் விளக்கம் கேட்கப்படும். வரும் மாதங்களில், இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.பங்கு மூலதனம்:மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில், 7,900 கோடி ரூபாய் அளவிற்கு, பங்கு மூலதனம் மேற்கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வங்கி வட்டி வீதங்கள் குறையும்போது, அது, வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு பலனைகொடுக்கும்; கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையின் அளவு குறையும். உதாரணமாக,9.7 சதவீத வட்டி மற்றும் 2 சதவீத பரிசீலனைக் கட்டண அடிப்படையில், 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால், அதற்காக மாதம், 18 ஆயிரத்து 905 ரூபாய் தவணை செலுத்த வேண்டும்.
மிச்சமாகும்:
இது, 9.85 சதவீத வட்டியின் அடிப்படையில், 19,102 ரூபாயாக இருக்கும்.ஆக, 0.15 சதவீதம் வட்டி குறைந்தால், ஒருவரின் மாத தவணையில், 297 ரூபாய்குறையும். ஒரு வருடத்திற்கு, 3,564 ரூபாய் மிச்சமாகும்.
காப்பீடு திட்டத்தில் 1௦ கோடி பேர்:அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் கூறியதாவது:
* பிரதமரின், 'பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா' மற்றும் 'பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா' என்ற இரு காப்பீட்டு திட்டங்களில், ஒரே மாதத்தில், 10.17 கோடி பேர் இணைந்துஉள்ளனர்.
* 'அடல் பென்ஷன் யோஜனா' ஓய்வூதிய திட்டத்தில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர்.i*இத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக, துவக்கத்தில் அவ்வளவாக அக்கறை காட்டாத தனியார் வங்கிகளும், தற்போது காப்பீடுகளை விற்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
உயர்வதே லட்சியம்:'இந்தியாவை, வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடு' என, சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.ஆனால், அதையும் தாண்டி உயர வேண்டும் என்பது தான் நமது லட்சியம்.கொள்கைகளை நிறைவேற்றுவதிலும், முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு உயிர் கொடுப்பதிலும், மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அடிப்படை கட்டமைப்பு துறைக்கான அரசின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதுவராக் கடன் அதிகமாக உள்ள வங்கிகளிடம்அதற்கான காரணம் கேட்கப்படும். இது தொடர்பான திட்டத்தையும், அரசு அறிவிக்க உள்ளது.இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.
இதற்கு முன்...:
* ரிசர்வ் வங்கி, கடந்த 2ம் தேதி, 'ரெப்போ' விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்தது. இதைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட மூன்று வங்கிகள், உடனடிஆக வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டன.
*ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் அடிப்படை வட்டி விகிதத்தை, 0.15 சதவீதம்குறைத்து, 9.70 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த வட்டி குறைப்பு, கடந்த, 8ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
* அலகாபாத் பேங்க், அடிப்படை வட்டி விகிதத்தை, 0.30 சதவீதம் குறைத்து, 9.95 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
* தேனா பேங்க், 0.25 சதவீதம் குறைத்து, அடிப்படை வட்டி விகிதத்தை, 10 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது.
* மேலும் சில வங்கிகள், அடிப்படை வட்டியை குறைத்து உள்ளன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி