ரூ.4,000ல் 4ஜி போன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2015

ரூ.4,000ல் 4ஜி போன்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4 ஜி ஸ்மார்ட்போன், வெறும் 4,000 ரூபாய் விலையில், டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வர உள்ளது என, முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குதாரர்களின் ஆண்டு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முகேஷ் அம்பானி மேலும் கூறியதாவது:
நவீன வசதிகள் அடங்கிய 4ஜி ஸ்மார்ட்போனை, மிக குறைந்த விலையில் தயாரித்து அளிப்பது, நிறுவனத்தின் முன்னுரிமைதிட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதன்படி, இவ்வகை ஸ்மார்ட்போன்கள், வெறும் 4,000 ரூபாய்க்கும் குறைவான விலையில், டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும்.மேலும், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் மாத கட்டணத்தில், அதிவேக இணையதள மற்றும் குரல்வழி சேவைகள் (வாய்ஸ் கால்) வழங்கப்பட உள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள், நகரங்கள், கிராமங்கள் என்ற பாகுபடின்றி, நாட்டின் மக்கள் தொகையில், 80 சதவீதம் பேருக்கு ஒரே விதமான தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.இதனை அடுத்த மூன்று ஆண்டுகளில், 100 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி