சாம்சங் மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? : உஷார்....வருதுஆபத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

சாம்சங் மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? : உஷார்....வருதுஆபத்து

சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்கள், 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்டசாம்சங் மொபைலில்,
குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால், அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம்.

லண்டனில் பிளாக் ஹெட் செக்யூரிட்டி அமைப்பு நடத்திய மாநாட்டில் ரேயன் வெல்டன் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம், சாம்சங் மொபைல்கள் எவ்வாறு ஊடுருவலாளர்களால் எந்தெந்த வகைகளில் எல்லாம் ஊடுவப்படுகிறது என்பது செய்துகாண்பித்தது. இதில், சாம்சங் பயன்பாட்டாளர்கள் "ஷிப்ட் கீ" யை அழுத்தினாலேஊடுருவலாளர்கள் அவர்களின் மொபைலுக்கு ஊடுவி விட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.ஜி.பி.எஸ்., கேமிரா, மைக்ரோபோன் உள்ளிட்ட சென்சார்கள் மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பிற்காக வைத்துள்ள மாலிசியஸ் அப்ளிகேஷனைகளையும் பயன்படுத்தி விட முடியும்.

அதுமட்டுமல்ல அந்த மொபைல் எவ்வாறு செயல்படுகிறது, என்னென்ன அப்ளிகேஷன்கள் உள்ளன, போனில் இருந்து செல்லும் அழைப்புக்கள், வரும் அழைப்புக்கள், மெசேஜ்கள், படங்கள் உள்ளிட்ட அனைத்து விபர்களையும் போனில் இருந்து ஊடுவலாளர்கள் எடுத்து விட முடியுமாம்.ஷிப்ட் கீ பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் சாம்சங் மொபைல்களை ஊடுவி விட முடியும் எனவும் செய்முறையில் காண்பிக்கப்பட்டுள்ளது.தங்களது மொபைல்கள் ஊடுவப்படுவதாக பல சாம்சங் வாடிக்கையாளர்கள் அந்நிறுவத்திடம் புகார் தெரிவித்துள்ளனராம். இதனால் இதனை சரிசெய்யும் நடவடிக்கையும் சாம்சங்க தற்போது இறங்கி உள்ளதாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி