கல்வியாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
கடலுர் நகராட்சி வன்னியர் பாளையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தொடக்கப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் குழந்தைவேளனார், சிவபிரகாசம், ரகு, சுப்பிரமணியம், ராமமச்சேந்திர சோழன் ஆகியோர் ஜூன் 1ஆம் தேதி இனிப்புகளை வழங்கினர். மேலும், பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்ந்த தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கினர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டொமினிக் உள்பட ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று, பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூரில் 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் ஜூன் 1ம் தேதி , பள்ளிக்கு வந்தனர். அப்போது ஊர் மக்கள் சார்பில் மேளதாளம் முழுங்க வரவேற்பு அளித்தனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 78 பேர் தேர்ச்சி அடைந்தனர். இப்பள்ளியில் 95.12 சதவிகிதம் தேர்ச்சி அடைந்ததை ஊர்மக்களும், ஆசிரியர்களும் பெருமையாக கருதுகின்றனர்.
ஆகையால்தான் இந்த வருடம் பள்ளி திறக்கும்போது ஆசியரிகளும் நன்றாக பணியாற்ற வேண்டும். மாணவர்களும் நன்கு பயில வேண்டும் என்பதற்காக ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன்வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி