இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம்: சிறப்பாசிரியர்கள் திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம்: சிறப்பாசிரியர்கள் திட்டம்

தமிழகத்தில் சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்என்று அனைத்து மாவட்ட சிறப்புக் கல்வியியல் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் மதுரையில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:ஈரோடு மாவட்டத்தில் சிறப்புப் பயிற்றுநர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அதைத் தொடர்ந்து, கோவை அன்னூர் வட்டார வள மைய பெண் சிறப்புப் பயிற்றுநர், உயர் அதிகாரிகளின் மிரட்டல் காரணமாக விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றார். தமிழகம் முழுவதும் சிறப்புப் பயிற்றுநர்கள் பணி நியமன ஆணையின்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள் ளனர்.இக்கல்வி முறையில் சிறப் புப் பயிற்றுநர்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்துவரும் மிரட்டல், அடக்குமுறை குறித்து சுதந்திரமாக வெளியில் தெரி விக்க முடியவில்லை. மேலும், மாற்றுத்திறன் கல்விக்கான திட்டங்களை வகுக்க நடத்தப்படும் மாநில அளவிலான கூட்டங் களில் இக்கல்விக்கென சிறப்புக் கல்வித் தகுதிபெற்ற சிறப்புப் பயிற்றுநர்களை அழைப்ப தில்லை. சிறப்பாசிரியர்கள் இல்லாமலேயே ஒருதலைபட்சமாக முடிவெடுக் கின்றனர்.சிறப்பாசிரியர்களுக்கு இது வரை பணி நியமன ஆணை தரவில்லை. இதனால் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அன்பும், ஆதரவும் தேவைப்படும் குழந்தை களுக்கு பணி செய்யும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கு உரிய மரி யாதை தருவதில்லை. அடிமை போல் நடத்துகின்றனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறன் உடையோருக்கான கல்வியில் இருந்து சிறப்பாசிரியர்களை புறக் கணித்து வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பாசிரி யர்கள் தங்களுக்கு இந்திய மறுவாழ்வு குழுமம் வழங்கிய சான்றிதழ்களை, அதனிடமே திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்.சிறப்பாசிரியர்களின் நிலை மையை கருத்தில் கொண்டு விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். பணிக் கட்ட ணம் வழங்கும் முறையை அமல் படுத்தாமல், தற்போதுள்ள ஊதிய முறையை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என அனைவருக்கும் கல்விஇயக்கம் மாநில திட்ட இயக்குநருக்கு கடிதம் அனுப்பி யுள்ளோம். திட்ட இயக்குநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வடிவேல் முருகன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி