பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு பள்ளிகள் - தேர்வு எழுதிய மையங்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களால் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்ப்டடது.
மாணவர்கள் தாங்களே தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 4-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த இணையதள முகவரிக்குச் சென்றால், Provisional Mark Sheet SSLC Result-March 2015 என்ற திரை தோன்றும். மாணவர்கள் தங்களது மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை தட்டச்சுசெய்ய வேண்டும்.மேலும், திரையில் தோன்று குறியீட்டினை அதில் உள்ளது போலவே டைப் செய்ய வேண்டும்.
அதன்பின்பு, View Result என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது பதிவெண் பெயரில் pdf file பதிவிறக்கமாகும். இந்தக் கோப்பில் தேர்வருக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும். அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி