அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்:பொன்ராஜ் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்:பொன்ராஜ் தகவல்


ராமேஸ்வரம்:“ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் சோலார் மின் விளக்கு பொருத்தப்பட உள்ளது,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.

       
மின்வசதியில்லாத தனுஷ்கோடியில் உள்ள 30 மீனவ குடும்பங்களுக்கு, சோலார் மின் விளக்குகள் மற்றும்சாதனங்கள், ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயர், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், 'இன்டர் நேஷனல் வீ சர்வ் பவுண்டேஷன்' நிர்வாகி டாக்டர் எம்.எஸ். விஜி, 'ஸ்டால் வார்ட் எனர்ஜி' அமைப்பு நிர்வாகி சலீம், ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் முருகன் பங்கேற்றனர்.
பின்னர், விஞ்ஞானி பொன்ராஜ் கூறியதாவது: 'கிரீன் ராமேஸ்வரம்' திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் செலவில், ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிகளில் சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம், 66 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, வகுப்பறையில் உள்ள மின்விசிறிகள், மின் விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்படும். இப்பணி, 2016க்குள் முடிவடையும். இதன் மூலம் 14 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி