பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங்:இன்று முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங்:இன்று முதல் அமல்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங் இன்று முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து கடந்த 2ம் தேதி மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நுகர்வோரின் தீவிரமான பிரச்னையாக கருதப்படும் "பாதியிலேயே அழைப்பு துண்டிக்கப்படும்' (கால் டிராப்) விவகாரத்துக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக
, கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 செல்லிடப்பேசி கோபுர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக டிராய் நிறுவனத்திடமும் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம்) ஆலோசனை நடத்தப்படும்.இதன் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையச் சமநிலை விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையை தொலைதொடர்புக் குழு அண்மையில் சமர்ப்பித்துள்ளது. இன்னும் சில தினங்களில் அந்த அறிக்கை, தொலைதொடர்புத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் பிஎஸ்என்எல் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 15ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். அதன் படி இன்று முதல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப்பகுதியில் இருந்து பேசினாலும் ஒரேகட்டணம்தான் வசூலிக்கப்படவுள்ளது. அழைப்பு பெறுவதற்கும் இனி கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி