தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்நீடிப்பதால் அதிருப்தியில் உள்ளனர்.கல்வித் துறைக்கு உட்பட்ட இத்திட்டத்தின்கீழ் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிதி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதுவரை சம்பளம் வழங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரை நிதித்துறையின் ஒப்புதல் பெற்று 'பே ஆர்டர்' வழங்கப்பட்டது. இதனால் ஓராண்டு வரை சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்படவில்லை.சில மாதங்களாக சம்பளம் வழங்க 'ஒவ்வொரு மாதமும் நிதித்துறையின் 'பே ஆர்டர்' பெற வேண்டும்' என திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி நிதித்துறை 'பே ஆர்டர்' பெற்று, அத்திட்ட இயக்குனரிடமிருந்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அதன் பின் தலைமையாசிரியர்களுக்கும் அந்த உத்தரவு வந்துசேர மாதத்தில் 15 நாட்கள் கடந்து விடுகின்றன. இதனால் பிற ஆசிரியர்கள் சம்பளம் பெறும் தேதியில் இவர்களுக்கு கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மாதந்தோறும் நிதித்துறை 'பே ஆர்டர்' பெற வேண்டும் என்ற உத்தரவால் சம்பளம் பெறுவதில் தொடர் தாமதம் ஏற்படுகிறது. அவர்களின் குடும்ப சூழலும் பாதிக்கிறது.
ஒரு மாதம் முன்கூட்டியே 'பே ஆர்டர்' பெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., போன்ற மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் ஆசிரியர்கள் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி