தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2015

தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம்

தேனியைச் சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர்.இவர் 2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயாரித்த வினா,
விடைத்தாளை திருடி முழு மதிப்பெண் பெற்றது தெரிந்தது. இதனால் தமிழ்மொழிக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க நிதித்துறைச் செயலர் 29.11.2012ல் உத்தரவிட்டார். டிஎன்பிஎஸ்சி விதிகளை மீறியதற்காக, 24.8.2012 முதல் 5 ஆண்டுக்கு அரசு பணியாளர் தேர்வுகளில் பங்கேற்கதமிழ்மொழிக்கு தடை விதித்து 2013ல் தேர்வாணையம் உத்தரவிட்டது.

இந்த இருஉத்தரவுகளையும் ரத்து செய்யக் கோரி தமிழ்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: தேர்வாணையம் 2012 முதல் 5 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு தேர்வுகளில் பங்கேற்க மனுதாரருக்கு தடை விதித்துள்ளது. மனுதாரர் செய்த தவறை சாதாரணமாக கருத முடியாது. மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்கினாலும் முக்கிய பணிகளில் நியமிக்கக் கூடாது. அப்படி செய்தால் அரசு ஆவணங்களை திருத்துவதற்கு வாய்ப்புள்ளது. மனுதாரர் தண்டனையில் இருந்து தப்பிய போதிலும், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி