கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2015

கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின்இளங்கலை வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
இதில் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த பிரிவில் கலந்துகொள்ள 52 பேர் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வில் 32 இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கானகலந்தாய்வு நாளை துவங்குகிறது. 7ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 27ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி