பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2015

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் பள்ளி விடுதிகளில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலர்தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சிறுபான்மை யினர் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக மாவட்டம் முழுவதும் 27 விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில், பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு மற்றும் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் விடுதியில் சேர தகுதியுடையவர்கள்.விடுதிகளில் தங்கும் மாணவர் களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு 4 ஜோடி பாலியெஸ்டர் காட்டன் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இந்த விடுதி களில் சேர மாணவ, மாணவியர் களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்துக்கும், கல்வி நிலையத் துக்கும் உள்ள தொலைவு கட்டாயம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவியருக்கு பொருந்தாது.

சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலு வலகத்தில், மாணவர்கள் இலவச மாக விண்ணப்பங்களை பெறலாம். பள்ளி விடுதிகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளைக்குள்ளும், கல்லூரி விடுதி களுக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற் படுத்தப்பட்ட அலுவலரிடம் வழங்க வேண்டும் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மனோகரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி