எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை: நாளை மாலை நல்ல நேரத்தில் தரவரிசை பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2015

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை: நாளை மாலை நல்ல நேரத்தில் தரவரிசை பட்டியல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. காலையில் நல்ல நேரம் இல்லை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மாலை 4.30 மணிக்கு பட்டியல் வெளியாகிறது.தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 398 இடங்கள் (15%) போக, மீதமுள்ள 2,257 இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன.இவை தவிர 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரி களில் இருந்து 780எம்பிபிஎஸ் இடங்களும் 23 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 1,432 பிடிஎஸ் இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், 2015 - 16 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு மொத்தம் 32,184 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 11-ம் தேதி மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நாளை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக காலை அல்லது நண்பகலில்தான் தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மாலையில் பட்டி யலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரி விளக்கம்

மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான தரவரிசைப் பட்டியலை 15-ம் தேதி வெளியிடுகிறோம். காலையில்நல்ல நேரம் இல்லாத தால், மாலை யில் வெளியிட முடிவு செய்துள்ளோம். மாலை 4.30 மணிக்கு நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் தரவரிசைப் பட்டியல்வெளியிடப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி