பள்ளி செல்லாத குழந்தைகள் 'உபாசி'யுடன் விவரம் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2015

பள்ளி செல்லாத குழந்தைகள் 'உபாசி'யுடன் விவரம் சேகரிப்பு

பள்ளி செல்லாத, தோட்டத் தொழிலாளர் குழந்தைகள் பற்றிய விவரத்தை, தென்னிந்திய தோட்ட அதிபர்களின் சங்க (உபாசி) உதவியுடன் சேகரிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
பள்ளி வயதில் உள்ள அனைத்து குழந்தைகளையும், பள்ளிகளில் சேர்க்கும் நோக்கத்தை மையமாக வைத்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள், ஏழு பேர், நீலகிரியில், பள்ளிசெல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு தோட்டத்துக்கும் சென்று விவரம் சேகரிப்பதில் உள்ள சிரமங்களை தவிர்க்க, தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) உதவியை நாட, எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.அலுவலர்கள் கூறுகையில், 'தோட்டங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர், அவர்களது பள்ளி செல்லாத குழந்தைகள் என, முழுமையான விவரங்களை சேகரிக்க, தென்னிந்திய தோட்ட அதிபர்கள்சங்கம், (உபாசி) நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி