ரயிலில் அபாய சங்கிலி இனி இருக்காது: ரூ.3,000 கோடி இழப்பால் மாற்று நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2015

ரயிலில் அபாய சங்கிலி இனி இருக்காது: ரூ.3,000 கோடி இழப்பால் மாற்று நடவடிக்கை

ரயில் பயணத்தின் போது, அவசர தேவைக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இனி இருக்காது. இதற்கு மாற்றாக, டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மொபைல் போன் எண்:

சமீப காலமாக, அவசியம் இல்லாத சிறிய காரணங்களுக்காகக் கூட, சிலர் சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.இதன் காரணமாக, ரயில்கள் தாமதமாகச் செல்ல நேரிடுவதோடு, ரயில்வே துறைக்கு இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்த சம்பவங்கள் மூலமாக மட்டும், 3,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில், தெரிய வந்துள்ளது. இதற்கு தீர்வாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகியோரின் மொபைல் போன் எண்கள் அச்சடிக்கப்பட்டு,பெட்டிகளில் ஒட்டப்பட்டு இருக்கும். அவசரத் தேவையின் போது, பயணிகள், டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்திக் கொள்ளலாம்.
என்ன மொழி?
பல மொழி பேசுவோர், ரயிலில் பயணிக்கும் போது, பயணி பேசும் மொழியை, டிரைவர் புரிந்து கொள்ள இயலாது. மொபைல் போனில் சிக்னல் கிடைக்காவிட்டாலும், புகார் தெரிவிக்க இயலாது. மொபைல் போனிலும், சிலர் தேவையில்லாமல் டிரைவரை அழைத்து, ரயிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது.இவற்றையும் ரயில்வே துறை அதிகாரிகள் யோசிக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி