ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், 'பேஸ்புக்'கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.
அரசுப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; 1,800 மையங்களில்,8.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆண், பெண் தேர்வர்களுக்கு, தனித்தனியேதேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, நண்பகல், 12:30 மணிக்கு முடிந்தது.தேர்வு மையங்களில், போலீஸ் பாதுகாப்பு மட்டு மின்றி, 5,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பறக்கும் படையிலும், 44 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.
இத்தேர்வில், ஒரு தரப்பினருக்கு வினாத்தாள் கடினமாகவும், மற்றொரு தரப்புக்கு வினாத்தாள் எளிதாகவும் இருந்தது.தேர்வு எழுதிய சென்னையைச் சேர்ந்த கவிதா கூறுகையில், ''நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்; என்னைப் போன்றோருக்கு வினாத்தாள் கடினமாகவே இருந்தது,'' என்றார்.ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீமதி கூறுகையில், ''சமச்சீர் கல்வி, 10ம் வகுப்புப் பாடப்புத்தகத்தை படித்திருந்ததால், வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன், 10ம் வகுப்பு முடித்திருந்தால், அவர்களுக்கு இது கடினம்,'' என்றார்.மண்ணடியைச் சேர்ந்த கல்பனா, ஷியாமளா மற்றும் அக் ஷய்குமாரியும் கூறுகையில், 'நாங்கள், இந்த ஆண்டுதான் பட்டப்படிப்பு முடித்துள்ளோம்; எங்களுக்கு வினாத்தாள் எளிதாகவே இருந்தது. அறிவியல் தொடர்பான கேள்விகள், அதிகளவில் இடம் பெற்றிருந்தன' என்றனர்.நேற்றைய தேர்வில், 40 பக்கங்களில், 150 கொள்குறி (அப்ஜெக்டிவ்) வினாக்கள் இடம் பெற்றன. 'பேஸ்புக்' தளத்தை உருவாக்கியவர் யார்; டில்லி - மும்பையை இணைக்கும் நெடுஞ்சாலை எது; 2014ல் அமைக்கப்பட்டது எத்தனையாவதுமக்களவை; இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் யார்; மலாலாவுடன் நோபல் பரிசை பெற்றவர் யார் போன்ற, 30க்கும் குறைவான பொது அறிவுக் கேள்விகளே இடம்பெற்றிருந்தன.
நாடுகளின் தலைநகர்தேர்வர்கள் 'கிறுகிறு': ஆய்வக உதவியாளர் தேர்வு வினாத்தாளில், 78வது கேள்வியாக சில நாடுகளின் தலைநகரப் பெயர்கள் கேட்கப்பட்டு உள்ளன. ஹங்கேரி, கிர்கிஸ்தான், லித்துவேனியா மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளின் பெயர்கள், பெரிய அளவில் பிரபலமாகாதவை என்பதால், தேர்வர்கள் கடும் குழப்பம் அடைந்தனர்.தேர்வர்கள் சிலர் கூறுகையில், 'இந்த நாடுகளின் பெயர்களைப் பார்த்ததுமே தலை சுற்றி விட்டது. கடினமாக கேட்க வேண்டும் என்பதற்காக, அறியப்படாத நாடுகளின் தலைநகரைக் கேட்டிருக்க வேண்டாம்' என்றனர்.

3 comments:

  1. old syllabus padichavangalukku exam romba tough but thaniya cut off varuma/

    ReplyDelete
  2. வராது. ஓல்ட் நியு என்று பிரிக்கமுடியாது பழைய சிலபசில் படித்திருந்தாலும் மீண்டும் புதிய சிலபஸ் புத்தகங்களை படித்துதான் ஆக வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி