பட்டியல் வந்தாச்சு; பணி நியமனம் என்னாச்சுகலக்கத்தில் உதவி பேராசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

பட்டியல் வந்தாச்சு; பணி நியமனம் என்னாச்சுகலக்கத்தில் உதவி பேராசிரியர்கள்

அரசுக் கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் ஏப்ரலில் வெளியிடப்பட்டது.கல்லுாரி திறக்கப்படும் நிலையில் பணி நியமன உத்தரவு கிடைக்காததால் தேர்வானவர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுக் கல்லுாரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 மார்ச் 15ல் வெளியிடப்பட்டது.

'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. ஆசிரியர் பணி அனுபவம், கல்வித் தகுதி, நேர்காணல் என மதிப்பெண் தனித்தனியாக வழங்கப்பட்டது. இதில் பிஎச்.டி., அல்லது 'நெட்' அல்லது 'ஸ்லெட்' தேர்ச்சி கட்டாயம்.இதன்படி, 2013 நவ.,25ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 2014 ஆக.,8ல் நேர்காணல் நடத்தி தேர்வானவர்களின் பட்டியல் ஏப்.,4ல் வெளியிடப்பட்டது. ஆனால் நியமன உத்தரவு இன்னும் வரவில்லை.'மாற்றுப்பணி' அதிர்ச்சி: ஜூன் 18ல் கல்லுாரிகள் துவங்கும் நிலையில், அரசுக் கல்லுாரிகளில் காலி இடங்களுக்கு பிற அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்கள் மாற்றுப் பணியாக நியமிக்கப்படுகின்றனர். இதனால் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.தேர்வானவர்கள் கூறியதாவது:அரசுக் கல்லுாரியில் வேலை என்பதால் இதற்கு முன் நல்ல சம்பளத்தில்பணியாற்றி வந்த தனியார் கல்லுாரி பணியை ராஜினாமா செய்தோம்.
பட்டியல் வெளியாகியும் இன்னும் உத்தரவு கிடைத்தபாடில்லை. இதனால் குடும்ப பொருளாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.டி.ஆர்.பி., தரப்பில் கேட்டால் 'கவலை வேண்டாம் விரைவில் உத்தரவு வரும்' என்கின்றனர். இதற்கிடையே மாற்றுப்பணி மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித்துறை இதில் கவனம் செலுத்தி விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றனர்.

25 comments:

  1. what about engineering and polytechnic trb exam...

    ReplyDelete
    Replies
    1. Job is nothing but a pipe dream for all the graduates. Because we are living in a competitive world.

      Delete
    2. polytechnic TRB varuma ???????????????????

      does anyone from ECE preparing ???????????

      Delete
  2. Replies
    1. May be after election. Trb takes more than two years to select the eligible professors. Placement is also over. Amma has to issue the order.

      Delete
    2. Manoj sir. ... Your subject please.

      Delete
  3. Will come wait. We cannot force them. Pg 2014_15 process will be finalized (welfare) within June 13.

    ReplyDelete
  4. Sir ,

    Welfare list la already CV complete panavungaluku chance irukuma for BC category ?

    selvan

    ReplyDelete
    Replies
    1. Am also ask same question sir, Cv atend pani zoology mbc sir! Kidaika chance iruka sir, !

      Delete
    2. Am also ask same question sir, Cv atend pani zoology mbc sir! Kidaika chance iruka sir, !

      Delete
    3. Mem 1r 2 mark koranchavanga kupdumpodhu avanga xtra mark and age vachu munadi poiduvanga. 1r2 mark koranchavanga Morethan 8 irupanga. Already cv ponavangalum includ avanga but final list xtra mark age irukavangaluku than irukum

      Delete
  5. Confirm ah welfare list varuma ?

    ReplyDelete
  6. Anybody know the details of case by net set organisation?

    ReplyDelete
  7. It is an injustice to the net set holders. Ph.D holders are always benefitted than the real heroes.

    ReplyDelete
  8. Engineering examku apply panni oru varsham achu innum exam epo nu therila..koduma..

    ReplyDelete
  9. when the order will be issued?????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி