குற்றாலத்தில் சாரலுடன் சீஸன் தொடங்கியது: பேரருவியில் தண்ணீர் கொட்டுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2015

குற்றாலத்தில் சாரலுடன் சீஸன் தொடங்கியது: பேரருவியில் தண்ணீர் கொட்டுகிறது

குற்றாலத்தில் சாரல் மழையுடன் சீஸன் தொடங்கியுள்ளது.
வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் பெய்வதுடன், பேரருவியில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந் துள்ளதுதிருக்குற்றாலம். பசுமை யான மலைத்தொடரும், அடர்ந்த வனங் களும், அரிய வகை வனவிலங்குக ளும் நிறைந்த இடம். பல்வேறு வகை யான மூலிகைகள் கலந்துவரும் தண்ணீரில் நீராடுவது உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப் படுகிறது.தென்மேற்குப் பருவ மழைக் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் பூத்தூறலாக பொழியும் சாரல் மழையிலும், கொட்டும் அருவிகளிலும் உடலை நனைக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். இம்மூன்று மாதங்களே சீஸன் காலம்.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி கோயிலுக்குச் செல்வர்.வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியதுமே சீஸன் ஆரம்பமாகிவிடுகிறது. தென்மேற்குப் பருவமழை உச்சத்தில் இருக்கும்போது அருவிகளில் அளவுக்கதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும்.அப்போது வீசும் தென்றல் காற்றும், சாரலும் குற்றாலத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரம்மியமான சூழலை கொடுக்கும்.நடப்பாண்டு கடந்த 2 வாரமாக சீஸன் தொடங்காமல் ஏமாற்றம் அளித்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசுகிறது. நேற்று காலையில் அருவிப் பகுதிகளில்லேசான சாரல் விழுந்தது. பேரருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது.மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் விழுந்து சீஸன் தொடங்கிவிடும் என்று இங்குள்ள வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி