Jun 12, 2015
Home
kalviseithi
ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
""காலிப்பணியிடங்கள் மறைக்கப்படாமல், ஒளிவுமறைவற்ற தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும்,'' என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலதுணைத் தலைவர் ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில், கரூரில் நேர்மையான
, ஊழலற்ற, ஒளிவுமறைவற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டியும், கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் நிகழும் லஞ்ச, லாவண்ய போக்கைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு,வட்டாரத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நகர தலைவர் காமராஜ் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜெயராஜ், மாவட்ட துணைத்தலைவர் தமிழரசி, கரூர் நகர பொருளாளர் விஜயலட்சுமி, கரூர் வட்டார பொருளாளர் சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரச் செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ் பேசினார். மாநில துணைத்தலைவர் ராஜா ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில், மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். காலிப்பணியிடங்கள் மறைக்கப்படாமல், நேர்மையான ஒளிமறைவற்ற தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். தகுதியுள்ள காலிப்பணியிடங்களை, முன் கூட்டியே வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசியல் மற்றும் அதிகார தலையீடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.நகரச் செயலாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.
Recommanded News
Related Post:
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2014 tet appoinment councelling attend pana mudiyuma
ReplyDelete2014 tet appoinment councelling attend pana mudiyuma
ReplyDelete