காஞ்சியில் கருட சேவை: இன்று உள்ளூர் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

காஞ்சியில் கருட சேவை: இன்று உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் ஒரு பகுதியான கருட சேவை உத்ஸவம் இன்று நடைபெறுகிறது.பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள 108 வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று.
வரதராஜ பெருமாள் அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் நாளன்று வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோத்ஸவவிழா தொடங்கும்.இந்த ஆண்டு பிரம்மோத்ஸவ விழா மே 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான திங்கள்கிழமை கருட சேவை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி அளவில் சிறப்பு அலங் காரத்தில் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளு கிறார்.
அப்போது கோபுர தரிசனமும் நடைபெறும். பின்னர் நான்கு ராஜ வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வரதராஜ பெரு மாள் பக்தர்களுக்கு அருள்பாலிப் பார். கருட சேவை உற்சவத் தின்போது, உற்சவப் பெருமா ளுக்கு முன்பாக வேத பாரா யண கோஷ்டியினர் வேத பாரா யணத்தைப் பாடியவாறு செல்வர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை யும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி