அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங்கல்லூரி களில்,
புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு,1.90 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வாங்கினர். இதில், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 545 பேர் விண்ணப்பித்தனர்.பரிசீலனை முடிந்து, மாணவர்களுக்கான சமவாய்ப்பு, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலையின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, 'ரேண்டம் எண்' வெளியீடு துவங் கும் என, தமிழ்நாடு மாணவர்சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்து உள்ளார்.இந்த எண், அந்தந்த விண்ணப்ப எண்களுடன், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். வரும், 19ம் தேதி, 'கட் - ஆப்' அடங்கிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 'ரேண்டம்' எண், சில மாணவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை என்ற பிரச்னையை சமாளிக்க, இந்த முறை பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 1.90 லட்சம் பேரில், ஐந்து பேருக்கு மட்டுமே, 'ரேண்டம் எண்' பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டது.
கணக்கீடு எப்படி?
முதலில் கணிதத்தில் யார் அதிக மதிப்பெண் என, பார்க்கப்படும். அதில், சமமாக இருந்தால் இயற்பியல்; அதில் சமமாக இருந்தால் வேதியியல், பின், நான்காம் பாட மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதில், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தரவரிசையில் முன்னுரிமை தரப்படும். நான்கு பாடங்களிலும் மதிப்பெண் சமமாக இருந்தால், பிறந்த தேதி சரிபார்க்கப்பட்டு, மூத்தவருக்கு முன்னுரிமை தரப்படும். அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம் எண்' பயன்படுத்த முடிவு செய்யப்படும். இந்த ரேண்டம் எண்ணில் யார் அதிக எண்ணிக்கை பெறுகிறாரோ, அவருக்கு தர வரிசையில் முன்னுரிமை கிடைக்கும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி