பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2015

பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் மொத்தம் 13 கல் லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 8 விடுதிகள் மாணவர் களுக்காகவும், 5 விடுதிகள் மாணவிகளுக் காகவும் செயல்பட்டு வருகின்றது.இந்த விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ-களில் பயிலும் மாணவர் கள் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவர் களுடைய பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல் வீட்டி லிருந்து கல்லூரிக்கு செல்லும் தூரம் குறைந்தபட்சம் 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.விடுதிகளுக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத் திலும், அந்தந்த விடுதி காப்பாளர்களிடமும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத் திலேயே சமர்ப்பிக்க வேண்டும். சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை விடுதியில் சேரும்போது வழங்கினால் போதும்.மேலும் முகாம்வாழ் இலங்கை தமிழர் மாணவர்களுக்காக ஒவ்வொரு விடுதியிலும் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி