முதல் தலைமுறை பட்டதாரியாக விரும்புவோர் 80 ஆயிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2015

முதல் தலைமுறை பட்டதாரியாக விரும்புவோர் 80 ஆயிரம்

அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.54 லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர், முதல் தலைமுறை பட்டதாரியாக ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்.மொத்த விண்ணப்பதாரர்களில், மாணவர்கள், 95,300 பேர்; மாணவியர், 58,938 பேர்; இதில்
, கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 1.51 லட்சம் பேர்; தொழிற்கல்வி பிரிவில், 3,104 பேர் இடம்பெற்று உள்ளனர்.

விளையாட்டுப் பிரிவில், 1,472 மாணவர், 595 மாணவியர் என, 2,067 பேர்; மாற்றுத்திறனாளிகளில், 246மாணவர், 102 மாணவியர் என, 348 பேர்; முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரில், 1,213 மாணவர், 902 மாணவியர் என, 2,115 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்த, மூன்று சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளில், 4,530 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில், 150 இடங்கள்; மாற்றுத்திறனாளிகள், 3 சதவீதம்; விளையாட்டுப் பிரிவினருக்கு, 500 இடங்கள் ஒதுக்கப்படும்.மொத்தமுள்ள விண்ணப்பங்களில், 52 சதவீதம் அளவுக்கு, 80,446 பேர், தங்களை முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்; இவர்களில், மாணவர், 52,197 பேர்; மாணவியர், 28,249 பேர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி