தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் இன்று (திங்கட்கிழமை)திறக்கப்படுகின்றன. இன்றே மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45 ஆயிரத்து 366 உள்ளன.
இந்த பள்ளிக்கூடங்களில் 87 லட்சத்து 68 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. விடுமுறையை கொண்டாடிய மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்கள். அவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்று எண்ணி தமிழக அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுகள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையானவிலை இல்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்றே வழங்கப்படும்
மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் இன்றே எந்தவித தடையும் இன்றி இவற்றை வழங்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, தமிழ்நாடு பாடநூல் சேவை கழக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மாவட்டங்களுக்கு அனுப்பிய பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சரியான முறையில் பள்ளிகளுக்கு சேர்க்க பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரை நேரில் சென்று பார்க்கவும், ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார்.அதன்படி அனைத்து அதிகாரிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்சென்றுவிட்டன.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி தங்கு தடையின்றி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் அன்றே கிடைக்க ஆவன செய்யும்படியும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி இன்று மகிழ்ச்சி பொங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுகள் வழங்கப்படுகின்றன.
பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45 ஆயிரத்து 366 உள்ளன.
இந்த பள்ளிக்கூடங்களில் 87 லட்சத்து 68 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
இன்றே வழங்கப்படும்
மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் இன்றே எந்தவித தடையும் இன்றி இவற்றை வழங்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, தமிழ்நாடு பாடநூல் சேவை கழக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மாவட்டங்களுக்கு அனுப்பிய பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சரியான முறையில் பள்ளிகளுக்கு சேர்க்க பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரை நேரில் சென்று பார்க்கவும், ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார்.அதன்படி அனைத்து அதிகாரிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்சென்றுவிட்டன.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி தங்கு தடையின்றி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் அன்றே கிடைக்க ஆவன செய்யும்படியும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி இன்று மகிழ்ச்சி பொங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுகள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி