ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் எப்போது?

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நுழைவு தேர்வு முடிவு மற்றும் தரவரிசைப் பட்டியல் வரும், 18ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக் கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிக்க, அண்ணா பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின்கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில் சேர
, ஜே.இ.இ., எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.இதில், இரண்டு விதமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஐ.எஸ்.எம்., என்ற இந்தியன் ஸ்கூல் ஆப்மைன்ஸ் ஆகியவற்றில் படிக்க, 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்கு முதலில், ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வு, மே, 24ம் தேதி முடிந்தது. தேர்வு முடிவுகள் வரும், 18ம் தேதி வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள, 17 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றில் படிக்க முடியும்.இதே போல், ஐ.ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, சென்னை, கிண்டியிலுள்ள சி.எப்.டி.ஐ., என்ற மத்திய காலணி உற்பத்தி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில், பி.டெக்., - எம்.டெக்., படிப்புகளில் சேர, 'ஜே.இ.இ., மெயின்' என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளன.ஆனாலும், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' தேர்வு முடிவுக்காக, தரவரிசை பட்டியல் தயாரிப்பு தாமதமாகியுள்ளது.
ஜே.இ.இ., மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.இதுகுறித்து, ஐ.ஐ.ஐ.டி., அதிகாரிகள் கூறியதாவது:தேர்வு முடிவுகள் வெளியானதும், சி.எஸ்.ஏ.பி., எனப்படும், மத்திய கல்வி நிறுவன இடங்கள் ஒதுக்கீடு வாரியத்தின் இணைய தளத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். பின், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி