அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து வர, மாணவர்களை தேடிச் செல்லும் நடைப் பயணத்தை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன.
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.இதன்படி, மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள வகுப்புகளின் பட்டியல்களை அனுப்ப வேண்டும்.மாணவர் எண்ணிக்கை குறைவான வகுப்பு கள், மாணவர்களே சேராத வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட வகுப்பு களின் ஆசிரியர்கள், பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நடைப் பயணமாக சென்று, பெற்றோரை நேரில் சந்தித்துப்பேச வேண்டும்.அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், பாதியில் படிப்பை விட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோரிடம் பேசி, அரசு பள்ளியில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கு வகுப்புகள் இல்லாத நேரங்களில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, உள்ளூர் மாணவர்களுடன், மாணவர் சேர்க்கை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி