பள்ளிக் கல்வித் துறை நடத்தும் புத்தாக்க அறிவியல் ஆய்வுக் கண்காட்சியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும்தான் 1006 பேர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் புத்தாக்க அறிவியல் கண்காட்சி வழக்கமாக மாவட்டத்தில் ஒரே நாளில் நடத்தப்படும்.
ஆனால், திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 461 பேரின் படைப்புகள் வெள்ளிக்கிழமைகாட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுபோன்று, வரும் 14-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 545 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.மாணவர் ஒருவருக்கு ரூ.5000 வீதம் 1006 படைப்புகளுக்கும் தொகை வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான கண்காட்சியில் பங்கு பெறும் 1006 பேர்களில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில்தான் அதிகளவில் 1006 மாணவர்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. ஆனந்தி.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி