அண்ணாமலை பல்கலை.யில் தொலைதூரக் கல்விக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2015

அண்ணாமலை பல்கலை.யில் தொலைதூரக் கல்விக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் நிகழாண்டு சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இளங்கலைப் பிரிவுகளில் பி.ஏ., பிஎஸ்.சி.,எல்.எல்.எம்.,பி.காம், பி.சி.ஏ, இசைத்துறை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இசைத்துறையில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், நாட்டியத்திலும் பட்டம், பட்டயம் படிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

முதுநிலையில் மருத்துவமனை நிர்வாகப் படிப்புகளும், தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கும், வகுப்புகள் அனைத்தும் கோவையில் உள்ள ஆசிரியர்களால் நடத்தப்படவுள்ளன. இதனிடையே, முதுநிலை மேலாண்மைப் படிப்புகளுக்கான வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் தளர்த்தப்பட்டுள்ளது. இதில், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாணவரின் ஆண்டு குடும்ப வருமானம் 2.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் தமிழக அரசின் கல்வி உதவித்தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.கூடுதல் விவரங்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம், சிங்காநல்லூர் படிப்பு மையம்,திருச்சி சாலை, கோவை 5 என்ற முகவரியில் உள்ள அலுவலகம், 0422-2594245 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி