செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2015

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை வடக்கு கோட்ட அஞ்சல்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கி.ரவீந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், 12 வயதாகும் குழந்தைகளுக்குகூட (2003 டிசம்பர் 2-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள்) செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை நீட்டிக்க உள்ளோம். இதையொட்டி சென்னை வடக்கு அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அயனாவரம், கோயம்பேடு, பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, வேப்பேரி, தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக மேலும் விவரம் அறிய 9445402822 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி