நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை எண் உள்ளது? எத்தனை பேருக்கு இல்லை?
என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் ஜார்ஜ்டவுன், ராயபுரம், பெரியமேடு, பெரம்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தியாகராயநகர், அடையாறு, மயிலாப்பூர் என 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.இதில் சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என மொத்தம் 849 பள்ளிகளில் 1 லட்சத்து 26 பேருக்கு ஆதார் அட்டை உள்ளன. 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து விண்ணப்பிக்காதவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆதார் எண் வழங்கப்பட உள்ளது. அதோடு, ‘ஸ்காலர்ஷிப்’ எனப்படும் கல்வி உதவித்தொகை வழங்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துவருகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி