சத்துணவு சமையலர் பணி நேர்முகத் தேர்வு: 172 இடங்களுக்கு800 பேர் போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2015

சத்துணவு சமையலர் பணி நேர்முகத் தேர்வு: 172 இடங்களுக்கு800 பேர் போட்டி

மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 172 சமையலர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 800 பேர் பங்கேற்றனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் காலியாக இருக்கும் சத்துணவு சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமைநடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாலசுப்பிரமணியன் தலைமையில் 10 குழுக்கள் நேர்முகத் தேர்வை நடத்தின. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர், துணை வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் ஒவ்வொன்றிலும் 10-லிருந்து 20காலியிடங்கள் என மொத்தம் 172 இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். நேர்முகத் தேர்வில் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சத்துணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி