பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2015-16 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி இதுவரை ஏழு நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகளில் 4,226இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4,956 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 16,688 இடங்கள் என மொத்தம் 25,870 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதுவரை அழைக்கப்பட்ட 32,901 பேரில் 6,893 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். 138 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துள்ளனர். ஜூலை 28-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு நிறைவுபெறஉள்ளது. இந்த நிலையில் பி.ஆர்க். படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 19-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்க உள்ள இந்த கலந்தாய்வு மாலை 6.30 மணிக்கு நிறைவுபெறும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி