இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலி: வேலை இல்லாததால் ஆர்வம் குறைந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலி: வேலை இல்லாததால் ஆர்வம் குறைந்தது.


பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில்சேர வேண்டும்' என்ற ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் என்ஜினீயர் பட்டம் பெறுகிறார்கள்.


       இதனால், சமீப காலமாக என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. வேலை கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவு சம்பளம் இல்லை. அதிக செலவு செய்து என்ஜினீயர் ஆனவர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் என்ஜினீயரிங் படிப்பு மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்தது. எனவே, கலை– அறிவியல் கல்லூரிகளில் படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 116 இடங்கள் உள்ளன. ஆனால் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பம் வாங்கினார்கள்.

இதில், 1 லட்சத்து 48 ஆயிரத்து 231 பேருக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்கும்படி அழைப்பு விடப்பட்டது. கடந்த 1–ந்தேதி பொது கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வருகிற 30–ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. முதல்நாள் கவுன்சிலிங்குக்கு 2 ஆயிரத்து 17 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஆயிரத்து 256 பேர் தான் வந்து இருந்தனர். 757 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. இடம் கிடைத்தவர்களில் 4 பேர் வேறு படிப்பை தேர்வு செய்து விட்டனர். நேற்று வரை 99 ஆயிரத்து 675 மாணவ–மாணவிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால், 71 ஆயிரத்து 838 பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். 27 ஆயிரத்து 474 பேர் வரவில்லை. இடம் கிடைத்தவர்களிலும் 363 பேர் என்ஜினீயரிங் கல்லூரியில் சேராமல் வேறு படிப்புகளை தேர்ந்தெடுத்து எடுத்து விட்டனர். இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 21 ஆயிரத்து 641 'என்ஜினீயரிங்' இடங்கள் காலியாக உள்ளன. வருகிற 30–ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெற இருக்கிறது. மீதம் உள்ள நாட்களில் மேலும் 20 ஆயிரம் மாணவ– மாணவிகள் 'கவுன்சிலிங்' பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில் சில கல்லூரிகளை யாரும் தேர்வு செய்யவில்லை. ஒரு சில கல்லூரிகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ–மாணவிகள் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி