மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2015

மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.


மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி
தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரி களில் 597 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,939 இடங்கள் நிரப்பப்பட்டன. முதல்கட்ட கவுன்சலிங்கில் அனு மதி கடிதம் பெற்ற மாணவ, மாணவி கள் தங்களுக்கான கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 9 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 108 மாணவர்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 20 மாணவர்கள் சேரவில்லை.

 இதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 137 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் ஏற்கெனவே காலியாக உள்ள 137 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,020 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 1,157 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி