அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில் சந்தித்த விளைவு ஏற்படும்: அலுவலர் சங்கம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில் சந்தித்த விளைவு ஏற்படும்: அலுவலர் சங்கம் எச்சரிக்கை

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடந்த 2003ல் சந்தித்தவிளைவை தான் அ.தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்,” என சிவகங்கையில் ஊரகவளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் என்.சேகர் பேசினார்.அவர்பேசியதாவது:


அரசுத்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்தபோது பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு சில சலுகையை மட்டும் வழங்கியது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலமுறை சம்பளம் போன்ற பொது கோரிக்கையை இது வரை நிறைவேற்றவில்லை. சில அமைச்சர்கள், அதிகாரிகள் பணியிட மாறுதல், பணி நியமனத்தில் கடும் வசூலில் ஈடுபடுகின்றனர்.

நடப்பு ஆண்டு 15 லட்சம் கழிப்பறைகள் கட்டுமாறு அரசு நிர்பந்திக்கிறது.அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழு மாற்றம் கோரி போராடி வருகின்றனர்.ஆனால், ஜூலை 10ம் தேதி வெளியான அரசு ஆணை எண்:200 நிதித்துறை செயலரின் உத்தரவில் 8வது ஊதியக்குழு பரிந்துரை வரும் வரை எவ்வித கோரிக்கையையும் அரசிடம் வைக்க கூடாது என கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கொளத்துாரில் பேசிய ஜெ.,புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அனைத்து துறை ஊழியரின் கோரிக்கை நிறைவேற்றுவேன் என்றார். இதுவரை நடக்கவில்லை. 2003 ஏப்ரல் 1க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தனர்.

அரசும் 10 சதவீதம் செலுத்தும்என்றனர். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணம்எங்கே?.அரசு ஊழியருக்கு பென்ஷனாக குறைந்தது ரூ.3,500 தர வேண்டும். செப்டம்பர் 2ல் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் பங்கேற்பர். இக்கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்ட் 22ல் அனைத்து மாவட்டத்திலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்றித்தராவிட்டால், கடந்த 2003 தேர்தலில் சந்தித்த விளைவுகளை தான் இந்த அரசு சந்திக்கும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி