வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் அவசியம்: பிளஸ் 2 மாணவர்கள் கடும் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2015

வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் அவசியம்: பிளஸ் 2 மாணவர்கள் கடும் அவதி

பிளஸ் 2 தேர்வு கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் எண் கட்டாயம் என்பதாலும், இணையதள வாயிலாக பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதாலும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டன.
அவற்றை, அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் கல்வித் தகுதியைப் பதிவுசெய்ய, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தை ஒரே நேரத்தில் அனைவரும் பயன்படுத்தியதால், பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாயினர்.இதைத் தொடர்ந்து, மாணவர்களிடம் மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும், பதிவின் போது, ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்படுகிறது.மதிப்பெண் சான்றுக்கு வரும் மாணவர்கள் ஆதார் எண் விவரங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவிப்பு ஏதும் செய்யாததாலும் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளிகளில், வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யவும், மடிக்கணினி பெறவும் ஆதார் எண் அவசியம், எனவே, ஆதார் எண்ணை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி