ஆசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் கேள்விக்குறியாகும் தமிழ்வழிக்கல்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2015

ஆசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் கேள்விக்குறியாகும் தமிழ்வழிக்கல்வி.

ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், கேரளாவில் தமிழ் வழி கல்வி பயிலும் 203மாணவ, மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கேரளாவில் பள்ளி கல்விதுறை பல்வேறு குளறுபடிகளில் சிக்கி தவித்து வருகிறது.
குறிப்பாக பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்களை நெருங்கும் நிலையில், இது வரையிலும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவ,மாணவிகளின் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இப்பிரச்னை மாநிலம் முழுவதும் நிலவும் நிலையில், ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அவலநிலை இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே உள்ள பம்பனார் அரசு உயர்நிலை பள்ளிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வசதியற்றவர்களின் பிள்ளைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலையாளம் மொழிக்கு போதுமான அளவில் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் வழிக்கல்வி பயிலும் 203 மாணவ,மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதற்கு ஏழு ஆசிரியர்கள் தேவை என்றபோதிலும், ஒரு ஆசிரியர் மட்டும் உள்ளார். இதனால் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. எனினும் மாணவ,மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே பாட புத்தகங்கள் கிடைக்காமல் மாணவ,மாணவிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் நியமிக்கப்படாததைக் கண்டு பெற்றோர் ஆவேசமடைந்தனர். பெற்றோர்-ஆசிரியர் சங்கம் தலைமையில் நேற்று முன்தினம் திரண்ட பெற்றோர் பள்ளியின் முன் புற கதவை பூட்டினர். இதனால் மலையாளம் மொழி ஆசிரியர்களும் பள்ளிக்குள் செல்ல முடியவில்லை. தகவல் அறிந்த போலீசார், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்குச் சென்று, பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பள்ளியின் நிலை குறித்து எடுத்துரைத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், பூட்டிய கதவை திறக்கப்பதற்கு பெற்றோர் சம்மதித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி