பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு: 4 கோடி குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு - திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு: 4 கோடி குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு - திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் தகவல்

கற்றல் குறைபாடு உள்ள குழந்தை களுக்கு பயிற்சி அளிக்க நாடு முழுவதும் 2.25 லட்சம் பேர் தேவை. ஆனால், 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறினார்.


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்துகையாள்வது’ தொடர்பான பயில ரங்கத்தில் துணைவேந்தர் சந்திர காந்தா ஜெயபாலன்பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வியை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெரிதும் ஊக்குவிக்கிறது. சிறப்புக் கல்வியில் இளங்கலை, முதுகலை, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறோம்.நம் நாட்டில் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 4 கோடி பேர் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக இருக் கிறார்கள். பரம்பரை, சூழல் காரணமாக கற்றல் குறைபாடு வரலாம். படிப்பில் சிறந்து விளங்கும் குழந்தைகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர் பெருமைப்படுகின்றனர். அதே வேளையில், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் நிலை, அவர்களது பெற்றோர் நிலை பரிதாபத்துக்கு உரியது. அத்தகைய குழந்தைகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க வேண் டியது மிகவும் அவசியம்.இந்திய மறுவாழ்வு கவுன்சில் அறிக்கையின்படி, கற்றல் குறை பாடு கொண்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்புக் கல்வியாளர்கள் நாடு முழுவதும்2 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேவை.

ஆனால், தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.இவ்வாறு துணைவேந்தர் சந்திர காந்தா ஜெயபாலன் கூறினார்.

பதிவாளர் எஸ்.விஜயன் வாழ்த்திப் பேசும்போது, ‘‘நம் நாட்டில் உள்ள குழந்தைகளில் 3 முதல் 10 சதவீதம் பேர் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. கிராமப்புற பள்ளிகளில் ஆரம்பக் கல்வி படிக்கும் குழந்தைகளில் 14 சதவீதம் பேருக்கு எழுத்துகளை வாசிப்பதில் பிரச்சினை இருக்கிறது. சரியாக படிக்க முடியாததால், அவர்கள் சுயமதிப்பை இழந்து படிப்பை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி