வேளாண்மை கலந்தாய்வு: 644 விண்ணப்பங்கள் நிராகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2015

வேளாண்மை கலந்தாய்வு: 644 விண்ணப்பங்கள் நிராகரிப்பு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைபடிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கியது. இக்கலந்தாய்வு தொடர்ந்து 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வேளாண்மை, தோட்டக்கலை படிப்பு பயில மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக ஏராளமான விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமை வகித்து, கலந்தாய்வைத் தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களின் சேர்க்கை கடிதத்தையும் அவர் வழங்கினார்.அண்ணமாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பில் சேர மொத்தம் 11,053 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 644 விண்ணப்பங்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன. தகுதி பெற்ற விண்ணப்பங்களாக 10,409 தேர்வு செய்யப்பட்டன.

இதில் 29 பேர் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள்.தகுதி பெற்ற விண்ணப்பங்களுக்கு ஜூலை 10ம் தேதி சமவாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) வெளியிடப்பட்டது. பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்பில் 1,000 பேரும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்பில் 70 பேரும் பல்கலைக்கழகத்தில் படிப்புக்குச் சேர்க்கப்படவுள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி