நடப்பு கல்வியாண்டின் துவக்கம் முதலே, தேர்ச்சி விகிதத்துக்காக ஆசிரியர்கள் விரட்டப்படுவதால், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை, இம்மாதத்துடன் நிறுத்திவிட்டு, பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்த, பெரும்பாலான, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கெடுபிடி நடவடிக்கை:
தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, 100 சதவீதமாக இருக்க வேண்டும் என, வலியுறுத்தி, காலாண்டு தேர்வு முதல், ஆசிரியர்களிடமும், பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் கெடுபிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 'ஸ்லோ லேர்னர்'பிரிக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டன.தேர்ச்சி விகிதம் குறைந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டதால், அனைவரின் கவனமும், 'ஸ்லோ லேர்னராக' இருந்த, மாணவர்களின் மீதே இருந்தது. கஷ்டப்பட்டு படித்தும், தேர்ச்சி பெற இயலாத மாணவர்களை, இடைநிறுத்தம் செய்யவும், பல பள்ளிகளில் தில்லுமுல்லு வேலைகள் நடந்தன. இருப்பினும், கடந்த ஆண்டில், அரசு பள்ளிகளில், எதிர்பார்த்த அளவுக்கு, தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
சனிக் கிழமைகளில்...
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு துவக்கம் முதலே, தலைமை ஆசிரியர்களிடம் கெடுபிடி துவங்கியுள்ளது. இந்த ஆண்டும், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அடிப்படையாக வைத்து, தினமும், காலை, மாலை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த துவங்கிஉள்ளனர்.கடந்த ஆண்டுகளில், தேர்ச்சி விகிதம்அதிகரிக்காமல் இருந்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அதில், 'டோஸ்'விடப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தேர்ச்சி விகிதம் வேண்டும் என, வலியுறுத்துவதால், அப்பள்ளிகளை பின்பற்றி, பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்புபாடங்களை, புறக்கணிக்க, அரசு பள்ளிகளும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆசிரியர்களுக்கு கட்டுப்படுவதில்லை. அதிக கட்டுப்பாடு விதித்தாலும், பள்ளிக்கு வருவதில்லை. பெற்றோரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. இதனால், அவர்களை இடைநில்லாமல், படிக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தினமும், இரு வேளை, 'டெஸ்ட்' என, வைத்தால், பள்ளிக்குமாணவர்கள் வருவதில்லை.
நிர்ப்பந்தம்:
இருப்பினும், தனியார் பள்ளிகளை ஒப்பிட்டு, தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என, கல்வித்துறை அலுவலர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை நடத்துவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 பாடங்களையே நடத்தி, தேர்வு வைத்து, மனப்பாடம் செய்ய வைக்கின்றனர். அதே முறையை, அரசு பள்ளிகளிலும் செய்ய பல தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வலியுறுத்தும், கல்வித்துறை அலுவலர்களால், அரசு பள்ளிகளில் தனித்தன்மை இழந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி