தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அரசு மீது கல்வி வல்லுனர் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2015

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அரசு மீது கல்வி வல்லுனர் புகார்

பெங்களூரு:''அரசு பள்ளிகளின் அபிவிருத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசு, தனியார் பள்ளிகளின்வளர்ச்சிக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது,'' என, கல்வி வல்லுனர் நிரஞ்சன் ஆராத்யா குற்றம் சாட்டினார்.பெங்களூருவில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:


அரசுபள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, அரசால் முடியவில்லை. கடந்த ஆண்டு, அரசு பள்ளி அபிவிருத்திக்காக, 47.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், அபிவிருத்தி அடையவில்லை. பெரும்பாலான பெற்றோர், தங்களின் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில், ஆர்வம்காட்டுகின்றனர்.மக்கள் பிரதிநிதிகளும், அரசு பள்ளி முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல், தனியார் பள்ளி அபிவிருத்திக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றனர்.

இங்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் இருந்தும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளே, பல கல்வி நிறுவனங்களை நடத்துவதால், சட்டசபையிலும், விவாதிக்கப்படுவதில்லை. கல்வித்துறை அபிவிருத்திக்கு கூடுதல் நிதியுதவி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, நிரஞ்சன் ஆராத்யாகூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி