ஓய்வூதியர்கள் ஜூலை 29-க்குள் குறைகளை அனுப்பலாம்: மாவட்ட ஆட்சியர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2015

ஓய்வூதியர்கள் ஜூலை 29-க்குள் குறைகளை அனுப்பலாம்: மாவட்ட ஆட்சியர்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை ஜூலை 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:


சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளைத் தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்கள், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓய்வு பெற்றபோது பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகம் (முழு முகவரியுடன்),ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண், கோரிக்கை விவரம் (சுருக்கமாக), கோரிக்கை நிலுவையிலுள்ள அலுவலகம் (முகவரியுடன்) ஆகிய தகவல்களை இரண்டு பிரதிகளில் "மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 62, ராஜாஜி சாலை, சென்னை-1' என்ற முகவரிக்கு வரும் ஜூலை 29-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி