பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் மாணவர்களின் விருப்ப பாடமாக தொடரும் இசிஇ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2015

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் மாணவர்களின் விருப்ப பாடமாக தொடரும் இசிஇ

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வில் மாணவர்களின் விருப்பப் பாடமாக இசிஇ பிரிவு இருந்து வருகிறது.

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இந்த கலந்தாய்வில் இதுவரை 29 ஆயிரத்து 344 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதில் இசிஇ பிரிவை 6 ஆயிரத்து 58 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இரண் டாவதாக மெக்கானிக்கல் பிரிவை 5 ஆயிரத்து 489 பேர் தேர்ந் தெடுத்துள்ளனர். கணினி அறி வியலை 3 ஆயிரத்து 995 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்தபடியாக 3ஆயிரத்து 594 மாணவர்கள் இஇஇ பிரிவில் சேர்ந்துள்ளனர்.கலந்தாய்வு தொடங்கியது முதல் ஆண்களின் விருப்ப பாட மாக மெக்கானிக்கல் பிரிவும் பெண்களின் விருப்ப பாடமாக இசிஇ பிரிவும் இருந்து வருகிறது.

மாணவர்களைப் பொறுத்தவரை இதுவரை 15 ஆயிரத்து 304 இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. இந்நிலையில் மெக் கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத் தால்மெக்கானிக்கல் சம்பந் தப்பட்ட துறையிலும் சேரலாம், ஐடி துறையிலும் பணியில்சேரலாம் என்பதால் மாண வர்களிடம் இப்பிரிவு அதிக வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த எட்டு நாட்களில் 5 ஆயிரத்து 366 மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந் தெடுத்துள்ளனர். அடுத்ததாக இசிஇ பிரிவை 1647 மாணவர் கள் தேர்ந்தெடுத் துள்ளனர்.மாணவிகள் பொதுவாக கணினி சார்ந்த பணியிலேயே சேர விரும்பு வதால், இசிஇ மற்றும் கணினி அறிவியல் பிரிவில் சேர அவர் களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இது வரை 14ஆயிரத்து 40 மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப் பட்டுள்ளது.

இதில் 4 ஆயிரத்து 472 மாணவிகள் இசிஇ பிரிவில் சேர்ந்துள்ளனர். கணினி அறிவியல் பிரிவை 2ஆயிரத்து 593 மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.நேற்று மதிய நிலவரப்படி இசிஇ பிரிவில் அண்ணா பல்கலைக் கழகம், எம்.ஐ.டி, கோவை ஜி.சி.டி கல்லூரி, பி.எஸ்.ஜி கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை.

அதே போன்று மெக்கானிக்கல் பிரிவிலும் அண்ணா பல்கலைக் கழகம், கோவை ஜி.சி.டிகல்லூரி, பி.எஸ்.ஜி கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை.அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, ஏசி டெக் கல்லூரி, எம்.ஐ.டி மற்றும் கட்டிட கலை மற்றும் திட்டக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஐந்து சதவீத இடங்கள் வெளிநாட்டவருக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் வெளிநாட்டவருக்கான கலந்தாய்வு நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இன்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந் தாய்வு நடைபெறுகிறது.

விளையாட்டு பிரிவில்..

விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 28-ம் தேதி நடைபெற்றது. இதில் காலியாக இருந்த 115 இடங்களுக்காக 200 மாணவர்கள்நேற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி