பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2015

பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.


இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள்மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடும்போது முந்தைய ஆண்டு அடிப்படையில் பணியிடங்களை நிர்ணயம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் நடப்பாண்டு மாணவர்கள் வருகை அடிப்படையில் பணிநிரவல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில்மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டு அடிப்படையில் பணிநிரவல் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

8 comments:

  1. Saturday, 25 July 2015
    ஆசிரியர்களுக்கு கடிவாளம் அவசியம் தீர்வு என்ன?

           ஒழுங்கீனமாக நடந்து கொண்ட, இரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடலை பருவம் எனப்படும், பதின் வயதுகளில் மாணவ, மாணவியர், தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்வது இயல்பு; புகை பிடித்தல், மது அருந்துதல், காதல் வயப்படுவது இப்பருவ வயதின் வெளிப்பாடு. சமீபத்தில், கோவையில் பள்ளி மாணவி ஒருவர், மதுபோதையில், ரோட்டில் கலாட்டா செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.


            இதேபோல், திருப்பூரில் பள்ளி மாணவர்கள், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்வதும், போலீசார் அவர்களை துரத்தி பிடிப்பதும், வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, இரு தலைமை ஆசிரியைகள் உட்பட நான்கு ஆசிரியர்கள், திருப்பூரில் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, கல்வித்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் இடையேவும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெற்றோருக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை தெய்வமாக மதிக்க வேண்டும் என, குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது வழக்கம். ஆனால், படித்த ஆசிரியர்களே பண்பு தவறி நடப்பது, பெற்றோர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களில் இருவர், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,பள்ளிக்குள் சண்டையிட்டு கொண்டதையும்; ஒருவர், தனக்காக சிலரை அடியாட்களாக பள்ளிக்குள் அழைத்து வந்ததையும், தனிநபர்களின் பிழையாக எடுத்துக் கொள்ளலாம்.

    ஒரு ஆசிரியர், ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவியரிடம், மொபைல் போனில் ஆபாசப்படம் காட்டி, புனிதமான ஆசிரியர் பணியை கொச்சைப்படுத்தி உள்ளார்.
    மற்றொரு பெண் ஆசிரியர், பாடப்புத்தகங்களை கூட தராமல், தான் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை கழுவும் பணியை, மாணவியருக்கு தந்திருக்கிறார். மாணவர் கழிப்பிடத்தை, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    அறிவை, ஒழுக்கத்தை, நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே, சராசரிக்கும் கீழான மனநிலையில், பண்பின்றி நடந்துகொள்வதை, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
    ஒவ்வொரு குழந்தையையும், தங்களது பிள்ளைகளாக பாவித்து, கல்வி கற்றுத்தரும் உண்மையான ஆசிரியர்களுக்கு, இதுபோன்ற சிலரால், பெருத்த அவமானமே ஏற்படுகிறது.
    துறை ரீதியாக பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற சம்பிரதாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இத்தவறுகளை தொடராமல் தவிர்ப்பர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
    எனவே, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "ஆசிரியர் பணி என்பது,சமுதாயத்தில் மதிக்கப்படும் உன்னதமானது. எதிர்கால சமுதாயத்தை, நல்லவிதமாக உருவாக்கும் கடமை உள்ளது.

    இதை மறந்து, சிலர் கீழ்த்தரமாக நடந்து கொள்வது, மற்ற ஆசிரியர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஒழுங்கீன ஆசிரியர்கள் மீது, தயவு தாட்சண்யமின்றி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
    மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சதாசிவத்திடம் கேட்டபோது,மாணவர்கள் தவறு செய்தால், அது, பக்குவம் இல்லாத, அவர்கள் வயதின் இயல்பு; தேவையெனில், அவர்களுக்கு கவுன்சிலிங்தரலாம். அனுபவம், முதிர்ச்சி பெற்ற ஆசிரியர்களே இதுபோல் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது மிகவும் தவறானது.
    அவர்களிடம் போதிய மனப்பக்குவம் இல்லாததையே காட்டுகிறது. ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடாமல், ஆசிரியர்கள், தங்களை தாங்களே திருத்திக்கொண்டு, சிறந்த முறையில் பணி செய்வதே,இதற்கு தீர்வாக அமையும், என்றார்

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற செய்திகளை அவ்வப்போது வழங்கிக் கொண்டே இருங்கள். இது ஆசிரியப் பணியை இன்னும் மேன்மைப் படுத்தும்

      நன்றி........

      Delete
  2. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete
  3. lab assistant exam result when

    ReplyDelete
  4. மனசாட்சி இல்லாத இது போன்ற ஆசிரியர்கள் அவர்களை விட திறமையானவர்கள் அவதி படுகிறார்கள்...இவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியை கொடுத்தால் கூட உழைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளட்டும்

    ReplyDelete
  5. Sunday, 26 July 2015
    கடவுள் எங்கே?
    உயரே தேடினாலும்
    ஊர் ஊரா தேடினாலும்

    கிடைக்காத கடவுள்-மனசாட்சியாய்
    என் மனதிடம் மன்றாடுகிறார்.

    அன்புடன்
    மு.கமலக்கண்ணன்

    விமர்சனங்கள் , மாற்றுக் கருத்துகள் வரவேற்க படுகின்றன.
    26/07/2015.  11.56pm
    M.Kamala kannan - gurugulam.com நேரம் 7/26/2015 11:53:00 p.m.
    Share

    1 comment:

    மனசாட்சி27 July 2015 at 07:47
    நிச்சயமாக கண்ணண்.
    இன்றைய சூழ்நிலையில், நல்லவனை விட நல்லவனாக நடிப்பவனே, நல்லவனாக நம்பப்படிகிறான்...எனக்கு மட்டுமே தெரியும் அவனின் உண்மை நிலை ...தனக்குள் நான் இருப்பதை உணர்பவனுக்கு நான் எந்நாளும் துணை நிற்பேன்...

    ReplyDelete

    ReplyDelete
  6. reserve posting kku selected condidate and physical director assemble on aguest third trb at10 am 9942299885

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி